Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

"அனுபவங்கள் பேசுகின்றன!" {AvaL Vikatan 11th March, 2014-Thanks to "AvaL Vikatan"...

$
0
0
அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200
'108’ நற்பண்பு!
காரைக்காலிலிருந்து அவசர வேலை காரணமாக சென்னைக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில் '108 ஆம்புலன்ஸ்’ எங்கள் பஸ்ஸைக் கடந்து சென்றது. அருகில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, கைகளைக் கூப்பி கண்களை மூடி முணுமுணுத்தாள். அவள் கண்களைத் திறந்தவுடன் ''என்ன செய்தே?'' என்று கேட்டேன். ''ஆம்புலன்ஸ்ல போறவங்க நல்லபடியாக குணமாகணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்றவள், தொடர்ந்து...
''ஒருநாள், எங்க கிளாஸ் மிஸ், 'காயம்பட்டவங்க, உடல்நலம் சரியில் லாதவங்களுக்கு நீங்க போய் உதவி செய்வீங்களா?’னு கேட்டாங்க... 'நாங்க சின்னப்பிள்ளைங்க... எப்படி மிஸ் செய்ய முடியும்?’னு சொன் னோம். 'அவங்க உயிர் பிழைக்கணும்னு வேண்டிக்கலாம் இல்லையா; உங்களை மாதிரி குட்டிப்பசங்களோட வேண்டுகோளை, கடவுள் நிறை வேற்றுவார்’னு சொன்னாங்க... அதான் வேண்டிக்கிட்டேன்'' என்றாள்.
பிஞ்சு உள்ளங்களில் மனித நேயத்தை விதைக்கும் அந்த ஆசிரியையை மனதுக்குள் பாராட்டிக்கொண்டேன். நானும் இப்போது ஆம்புலன்ஸ் கடந்தால், அதில் செல்பவர் குணமாக வேண்டிக்கொள் கிறேன்.
- ச.செல்வியா, காரைக்கால்
சீர் செய்யப் போறீங்களா... போன் போடுங்க!
ன் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைத்திருந்தோம். சீர்வரிசை நிறைய வந்திருந்தது. அதில் உள்ள சோப்பு, பவுடர் பொட்டு போன்றவற்றில், நாங்கள் வழக்கமாக உபயோகப்படுத்தும் பிராண்ட் ஒன்றுகூட இல்லை. அவரவர் விருப்பத் துக்கு வாங்கியதால், வெவ்வேறு பிராண்ட் என்றே இருந்தன. அவற்றை திடீரென உபயோகித்தால் ஸ்கின் அலர்ஜி ஏற்படும் என்ற பயம் காரணமாக... அப்படியே வைத்துவிட்டேன். மற்ற வர்களுக்கும் இதே நிலைதானே என்பதால், அவற்றை அவர் களுக்குத் தருவதற்கும் மனது வரவில்லை.
'நலங்கு செய்பவர்கள், சீர்வரிசை செய்பவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு போன் செய்து பிராண்ட் பற்றி தெரிந்துகொண்டு வாங் கிக் கொடுத்தால்... பயனுள்ளதாக இருக்குமே' என்று யோசித் தேன். தற்போது பின்பற்ற ஆரம்பித்துவிட்டேன். தோழிகளே, நீங்களும் இதைச் செய்யலாமே..!
- செந்தமிழ் கந்தசாமி, ஆண்டிமடம்
இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இப்படியா?
னக்குத் தெரிந்த சமையல் செய்யும் பெண்மணி அவர். பல்வேறு நிகழ்வுகளுக்கும் சமையல் மற்றும் பட்சணங்கள் செய்து தருபவர். சமீபத்தில், 'வளைகாப்பு மற்றும் சீமந்தத்துக்கு பட்சணம் செய்ய வேண்டும்' என்று சொல்லி, லிஸ்ட் பெற்றுக் கொண்ட ஒரு குடும்பத்தினர், தேதியைச் சொல்லி, 1,000 ரூபாய் அட்வான்ஸும் தந்துள்ளனர்.
இரண்டு நாள் கழித்து போனில் கூப்பிட்டு ''நீங்க வர வேண்டாம். வேறு ஒருவரை வைத்து செய்யப் போகிறோம்'' என்று கூறியுள்ளனர். காரணம் கேட்டதற்கு, ''உங்களுக்கு குழந்தைகள் இல்லையாமே... சமீபத்தில் கணவரும் இறந்துவிட்டாராமே?'’ என்றெல்லாம் சொன்னதோடு... ''5 வருஷத்துக்கு பிறகு உன் மகள் கர்ப்பமாகி இருக்கிறாள். அந்த மாமியை வைத்து ஏன் செய்கிறாய்? சுமங்கலியை வைத்து செய்யலாம் என்று உறவினர்கள் சொல்கிறார்கள். அட்வான்ஸ் பணத்தை நீங்களே வெச்சுக்கோங்க'' என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்களாம்.
பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்த அந்தப் பெண்மணி, என்னிடம் சொல்லி குமுறி அழுதார்.
குழந்தைகள் இல்லாமல் போவது, கணவன் இறப்பது இதற்கெல்லாம் பெண்தான் காரணமா? மற்றவர்களின் வலியை உணராமல், இப்படி எல்லாம் மூடநம்பிக்கையை தூக்கிப் பிடிக்கும் மனிதர்கள் இந்த நூற்றாண்டிலுமா?
- ஆர்.ராஜலட்சுமி, சென்னை-42

================================================== ============
My first comments are : (1)'அந்த சிறுமையின் செயல் பாராட்டத்தக்கதே' (2) 'முக்கியமாக கல்யாணத்திற்கு 'Gift' மணமக்களுக்கு கொடுப்பவர்களுக்கும் இது மிகவே பொருந்தும். 'Gift Cheque' ஆக அளிப்பது சாலச்சிறந்தது.' (3) 'இது கயமை குணத்துக்கு எடுத்துகாட்டு. இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இது மாதிரி நிகழ்வுகள் நடக்கின்றனவே என்பது வருத்தப்படும் விஷயம் தான். நண்பர்கள் அவ்வப்போது சொல்லி சீர் படுத்தவேண்டும். இந்த social service கூட செய்யாவிட்டால் என்ன பயன்?' Comments from others are welcome.

"bharathymanian"


Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles