Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

ஏதோ ஒரு கோபத்தில் எழுதியது...

$
0
0
உயிரும் உடலுமாய்
கூடவே வாழும் மனிதனுக்கே புரியவில்லை
கண்ணுக்கே தெரியாமல்
கல்லில் வாழும் உனக்கா புரியப் போகிறது கடவுளே?


அழுதழுது காய்ந்து போகிறது கண்கள்
துடைக்க இல்லை ஒரு கையும்
கேட்க இல்லை ஒரு நாதியும்...


படைக்க தெரிந்த உனக்கு
பக்குவம் கொஞ்சமும் இல்லை
இருந்திருந்தால்
என் கண்ணீர் என்றோ காணாமல் போயிருக்கும்...


கொஞ்சம் வலிமை தாராய்
என் கடவுளே! கல்லே!
கொஞ்சமேனும் வலிமை தா...


ஊமையாய் படைத்திருக்கலாம்
ஊனமாய் படைத்திருக்கலாம்
முழுதாய் படைத்துவிட்டு மொத்தமாய் வதைக்கிறாய்!


கேட்டதை கொடுக்கவில்லை
வேண்டாததை வலிய திணித்தாய்
கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொண்டேன்
அதனால் தான் வதைக்கிறாயோ?


எதிர்த்திருக்க வேண்டுமோ?
மறுத்திருக்க வேண்டுமோ?
தந்தது நீயென்பதால்
கேள்வி கூட கேட்கவில்லை
கேட்டிருக்க வேண்டுமோ?


நல்லதே செய்வாய்
கூடவே இருப்பாய்
ஏதும் தவறாகாதென இன்றும் நம்புகிறேன்
நம்பிக்கை காப்பாறுவாயா என் கடவுளே? கல்லே?

Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles