Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

"பக்தி விஷயங்கள்"...[கல்கியில் வெளியானது.]

$
0
0
மனம் நிறைந்த அனுபவம்...
ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற சென்ற வாரம் குடும்பத்துடன் மதுரை மீனாட்சியை தரிசிக்கச் சென்றோம். இந்தக் கோயிலின் சிறப்பு நாட்டின் பல பகுதிகளிருந்தும் பக்தர்கள் மதுரைக்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் பெரும் திரளாக வந்து கொண்டே இருப்பதுதான். வெளிநாட்டினரும் கோஷ்டி கோஷ்டியாக மதுரை வந்த வண்ணம் இருக்கின்றனர். அதி அற்புதமான சிற்பங்களை வடிவமைத்த சிற்பிகளின் கைத்திறனை பாராட்டி மகிழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் பல நகரங்கள் வானுயரக் கட்டடங்கள், நவீன மேம்பாலங்கள் என வளர்ச்சிப் பாதையில் விரைந்து கொண்டிருப்பதைப் போல மதுரையில் அதிகமாகக் காண முடியவில்லையே என்று மதுரை நண்பரைக் கேட்டேன். அவர்,‘கண் கண்ட தெய்வம் மீனாட்சியை வணங்கி தான் அன்றைய நாளைத் தொடங்குவோம். மன திருப்தி தரும் வாழ்க்கையை அவள் அருள்கிறாள். இதைவிட வேற என்ன தேவை?’ என்று நெகிழ்ந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டியது குலசேகர பாண்டியனும், அவனுக்கு பின்பு மதுரையை ஆண்ட மாறவர்ம சுந்தர பாண்டியனும் என்று சரித்திரம் தெரிவிக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள், தலை வணங்கி அவர்களுக்கு மனதார நன்றி செலுத்த வேண்டும். வாழ்விலே ஒருமுறையாவது மீனாட்சி அம்மனை கண்குளிரக் கண்டு தரிசிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------
'பாரதிமணியன்'


Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles