வண்ணங்களின் மத்தாப்பு...
அம்மா நாளைக்கு மறக்காம அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்பி விடுங்க. ஷார்ப்பா ஏழு மணிக்கெல்லாம் ஸ்கூல்ல இருக்கணும். லேட்டாப் போனா, எல்லோரும் என்னை விட்டுட்டு டூருக்குக் கிளம்பிப் போயிடுவாங்க
-அஞ்சு இதோடு ஆறாவது தடவையாக அம்மாவிடம் சொல்கிறாள்.
நீ நல்லாத் தூங்கி எழுந்திரு செல்லம். அம்மா மறக்காம அஞ்சு மணிக்குக் கூப்பிடறேன் -என்றபடியே அம்மா போர்வையை எடுத்து அவளது கால்களை நன்றாக மூடிப் போர்த்திவிட்டாள்.
லைட்டை அணைச்சுட்டுப் போறேன். குட் நைட்
குட் நைட் மா
அஞ்சு கண்களை மூடித் தூங்க முயன்றாள். தூக்கம் வர மறுத்தது. ஊட்டிக்கு நாளைக்குப் போகும் நினைப்பே நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. நினைக்கும்போதே இன்பக் குளிரடித்தது.
கரடி பொம்மையின் ரோமம் அவளது கன்னத்தை மென்மையாக உரசியது.
ஊட்டி எப்படி இருக்கும் ? இந்த டெட்டிபோல மெத்தென்று இருக்குமா?
50 இருக்கைகளுடன்கூடிய அந்த டீலக்ஸ் மினி பஸ்ஸில், அஞ்சுவும், பூஜாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். பூஜாதான் அஞ்சுவின் நெருங்கிய தோழி. ஊட்டியைக் காணப்போகும் குதூகலம் இருவர் முகத்திலும் அப்பட்டமாக ஒட்டியிருந்தது.
நீல நிற ஜீன்ஸ், வெள்ளை டாப்ஸுக்கு மேலே முழங்கை வரை நீண்ட சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் அஞ்சு. பாப் செய்யப்பட்ட தலையில் சிவப்பு நிற ஹெட்பேண்ட், கிரீடம் போல் அமர்ந்திருந்தது. மஞ்சளும், வயலட்டும் கலந்த இரு நிறத்தில் சின்னச் சின்ன பூக்கள் தூவிய மிடி அணிந்திருந்தாள் பூஜா. ஷாம்பூ போட்டுக் குளித்திருந்ததால், கரு நிறக் கூந்தல் டாலடித்தது.
இப்பவே குளிர ஆரம்பிச்சிருச்சு என்றாள் பூஜா, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடியே.
பஸ் மேட்டுப்பாளையத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. டேப்பில் ஒலித்த பாட்டையும் மீறி, மாணவ, மாணவிகளின் பேச்சு ஆரவாரமாக ஒலித்தது.
அதோ அதுதான் நீலகிரி மலை. கருநீலக் கலர்ல படர்ந்திருக்கற அந்த மலைக்குத்தான் நீலகிரின்னு பேர் -செண்பகா மிஸ் மாணவர்களுக்கு விளக்கினார்.
ஆ பூஜா அங்க பாருடி வெள்ளை நீர் வீழ்ச்சி ஐயோ எவ்ளோ அழகு என்று கத்தியபடியே தூரத்தில் தெரிந்த நீர்வீழ்ச்சியை நோக்கிக் கை காட்டினாள் அஞ்சு.
அஞ்சு, பசிக்குதுடி. சிப்ஸ் சாப்பிடலாமா? என்றபடியே தன் தோல் பையிலிருந்து சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துப் பிரித்தாள் பூஜா.
உப்பும், உறைப்புமாக அந்தக் குளிருக்கு இதமாக இருந்தது உருளைக்கிழங்கு வறுவல், காரத்தைத் தணிக்க டெட்ராபாக்கில் நிரப்பப்பட்ட ஆரஞ்சு நிறத் திரவத்தைக் குடித்தனர்.
உதகை பஸ் நிலையத்துக்கு அருகிலேயே வசதியான காட்டேஜில் அவர்கள் தங்குவதற்கு நீண்ட விசாலமான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அறுபது, எழுபது பேர் தாராளமாகப் படுத்து உறங்கலாம்.
இன்னும் 20 நிமிஷத்துக்குள்ள நாம பொட்டானிக்கல் கார்டன் போறோம். சீக்கிரம் ரெடியாகுங்க என்றபடியே செண்பகா மிஸ்ஸும், சுதா மிஸ்ஸும் அறையிலிருந்து வெளியேறினர்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் பொட்டானிக்கல் கார்டனை அடைந்தனர். கார்டனுக்குள் நுழைந்ததும் அஞ்சுவும், பூஜாவும் பரவசத்தின் உச்சத்துக்குச் சென்றனர். எங்கெங்கு காணினும் பசுமை!
வலதுபுறத்தில் இருந்த நீண்ட பசும்புல்வெளியைப் பார்த்து ஓடினாள் அஞ்சு. அவளைத் தொடர்ந்து ஓடிய பூஜா, தோழியை எட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். இருவரும் புல் தரையில் படுத்துப் புரண்டனர். அவர்களுடன் வந்திருந்த மற்ற தோழிகளும், தோழர்களும் ஆங்காங்கே அமர்ந்து இயற்கையை ரசித்தபடியே பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த மலர்களைப் பார்த்ததும் அசந்து நின்றுவிட்டாள் அஞ்சு. ரத்தச் சிவப்பும், பளீர் வெண்மையுமாக மாசுமருவற்ற மலர்கள். பச்சைக் குழந்தையின் பாதம்போல் இளம் ரோஜா வனத்தில் மலர்ந்து சிரித்த பூக்கள், வயலெட் பூக்கள், ஊதாவில் வெண்மை கலந்த ஆர்க்கிட் மலர்கள், ஊதுகுழல் போன்ற நீண்ட காம்பின் நுனியில் துளிர்விட்டிருக்கும் சாம்பல் நிறப் பூக்கள், பிரவுன் நிறத் தொட்டியில் நேர்த்தியாய் வெட்டிவிடப்பட்ட பச்சை இலைகளினூடே சிரிக்கும் இளஞ்சிவப்பு மொட்டுகள், அளவெடுத்து கத்தரித்ததுபோல் அடுக்கடுக்கான இதழ்களுடன் புன்னகை பூக்கும் கத்தரி நிறப் பூக்கள்.
எல்லா வண்ணமும் ஒருங்கே இங்கு கொட்டிக் கிடக்கும் அழகை தரிசித்த ஆனந்தத்தில், அஞ்சுவும், பூஜாவும் பேச மறந்து நின்றனர்.
அலைந்து திரிந்த களைப்பும், சோர்வுமாக எல்லோரும் காட்டேஜூக்குத் திரும்பினர். இரவு 8 மணிக்குள்ளாகவே குளிர் ஆளை அசரடித்தது. பற்கள் தந்தியடிக்கத் துவங்கின. எல்லோரும் படுக்க ஆயத்தமாயினர்.
பூஜா, நான் முதல்ல வெளியே போறேன். நீ எனக்குப் பின்னாலயே வா என்று யாருக்கும் கேட்காமல் ரகசியக் குரலில் தோழியின் காதில் முணுமுணுத்தபடியே, மெல்ல எழுந்தாள் அஞ்சு.
அறையைவிட்டு வெளியே வந்தாள் அஞ்சு. பூஜாவும் தொடர்ந்து வர, வழியில் கடையில் வாங்கி கைப்பையில் மறைத்து வைத்திருந்த ஐஸ்கிரீம் கப்புகளை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். குளிருக்கு ஐஸ் கிரீம் உருகாமல் அப்படியே இருந்தது.
காட்டேஜூக்கு வெளியே புல்தரையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி இருவரும் ஓடினர். எதிரே வருபவரின் முகம் தெரியாதபடிக்கு எங்கும் இருட்டு. உயிரைத் துளைக்கும் ராட்சதக் குளிர். அஞ்சுவும், பூஜாவும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தனர். யாரையும் காணவில்லை. குளிருக்குப் பயந்து கொண்டு மரங்கள்கூட அசையாமல் நின்றிருந்தன.
ஐஸ்கிரீம் கப்பின் மீது போர்த்தப்பட்டிருந்த உறையை அகற்றிவிட்டு, மரக்குச்சியால் ஐஸ் கிரீமை மெல்ல மெல்ல சுவைக்கத் தொடங்கினர். பிரௌன் நிற சாக்லேட் ஐஸ்கிரீம் தொண்டைக்குள் குளிர்ச்சியாய் இறங்கி, நாக்கை தித்திக்க வைத்தது.
என்னோட ரொம்ப நாள் ஆசை இது பூஜா. ஊட்டி போல இருக்கற குளிர் பிரதேசத்துல ராத்திரி நேரத்துல ஐஸ்கிரீம் சாப்பிடணும்கிறது என்னோட ஆசை. வீட்ல அம்மா, அப்பாகிட்ட சொன்னா உதைதான் கிடைக்கும். இன்னைக்கு என் ஆசை நிறைவேறிடுச்சு. அதுவும் உன்கூட சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டறது எப்பவும் என்னால மறக்கவே முடியாத அனுபவம் அஞ்சுவின் குரலில் மகிழ்ச்சி வழிந்தது.
அடுத்த நாள் தொட்டபெட்டா, பைக்கார நீர்வீழ்ச்சி என்று மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் ரோஜா பூங்காவுக்குச் சென்றனர்.
ஒவ்வொரு செடியின் அருகிலும்போய், ரோஜாக்களின் அருகில் அமர்ந்து ஆசைதீர ரசித்தாள் அஞ்சு.
மஞ்சளில் மட்டும் ஐந்தாறு வகைகள். ரோஜா நிறத்தில் நான்கைந்து வகைகள். சிவப்பில் இத்தனை நிறங்களா ! ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள்போல, ஒரு பூவில் இரு வண்ணங்கள். இளம் மஞ்சளில் கரை கட்டினாற்போல சிவப்பு நிறம் தாங்கிய பெரிய ரோஜா தூய வெண்மையில் முகம் காட்டும் நாட்டு ரோஜா பச்சை நிறத்தில் பார்வையாளர்களை அழைக்கும் புத்தம் புது ரோஜா.
ஓ ரோஜாக்களே ! அடுத்தபிறவி என்று ஒன்று இருந்தால், உங்களைப்போல வண்ண மலர்களாக மலர்ந்து சிரிக்க வேண்டும் என்றாள் அஞ்சு ஒரு கவிதாயினியைப் போல. அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தாள் பூஜா.
உதகையைவிட்டுக் கிளம்பும்போது மனசு நிறைந்திருந்தது,. இதுபோன்ற ஒரு சுற்றுலா இனி தனக்கு வாழ்க்கையில் கிடைக்கப்போவதில்லை என்றே பட்டது அஞ்சுவுக்கு. பஸ் புறப்பட்டு நீண்ட நேரமாகியும், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு வந்தவளைப் பார்த்து பூஜாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பேச்சுக்குரல் கேட்டு கண்விழித்தாள் அஞ்சு. குழந்தை தூங்கட்டும். பார்வை தெரியாத பெண்ணை எப்படி டூருக்கு அனுப்பறதுன்னு நினைச்சேன். நல்லவேளையா டூர் கேன்சல் ஆகிடுச்சாம். கரஸ்பான்டன்டோட அம்மா இறந்துட்டாங்களாம் என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக் கொண்டிருந்தது அஞ்சுவின் காதுகளில் விழுந்தது.
அஞ்சு போர்வைக்குள் குலுங்கி அழுவது அவர்கள் பார்வையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-----------------------------------------------------------------------------
பார்வையே தெரியாத பெண்ணின் ஊட்டி வர்ணனை......சில பார்வை தெரிந்தவர்களின் வர்ணனைகளைவிட ஜோர். பொதுவாக நல்ல பார்வை கொண்டவர்கள், முக்கால்வாசி பேர் இயற்கையை ரசிப்பதில்லை. துரதிஷ்டம்.
"BharathyManian"