Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

பத்திரிக்கை/தமிழ் இதழ்களின் செய்திகள் [Thx to

$
0
0
சாதனைப் பெண்மணி
வெளியே வந்த ஊழல்!

வெளிச்சத்துக்கு வராத தமிழச்சி!

வனராஜன்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் அஜிதா. சமீபத்தில் சிறந்த பத்திரிகையாளருக்கான விருது மற்றும் 11 ஆயிரம் அமெரிக்க டாலர் தொகையைப் பரிசாகப் பெற்றிருக்கிறார். எதற்காக இந்த விருது, அப்படி அவர் செய்த சாதனை என்ன?
தனியொரு பெண்ணாக நின்று இந்தியாவின் பாதுகாப்புத் துறை தொடர்பான ஊழலை டைம்ஸ் அஃப் இந்தியா மூலமாக இந்தியா முழுவதும் வெளியே கொண்டு வந்தவர்தான் இந்த அஜிதா. ஆனால், இங்குள்ளவர்கள் யாருமே இவரைக் கண்டு கொள்ளாத நிலையில், ஜெய்0ப்பூரில் மத்தியப்பிரதேச முதல்வரால் இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சிறு தேடலுக்குப் பிறகு அவரை நேரில் சந்தித்தோம்...


உங்களைப் பற்றி...?



நான் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண். தாத்தா அரசியல்வாதி. பள்ளியில் படிக்கும்போதே நாள்தோறும் தவறாமல், தினசரிச் செய்தித்தாளைப் படித்து விடுவேன். அப்போதிலிருந்தே அரசியல் என்றாலே அலாதிப் பிரியம் உண்டு. கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படித்தேன். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்றேன். ஜெயா டி.வி., புதிய தலைமுறை, டைம்ஸ் அஃப் இந்தியா, பி.டி.ஐ., யு.என்.ஐ. என பல ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உண்டு. தற்போது ஏ.எஃப்.பி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்."


பாதுகாப்புத் துறையில் நடந்த பிரச்னை என்ன?



சென்னை தரமணியில் கம்யூனிகேஷன் ரிசர்ச் டெவலப்மென்ட் சென்டர் என்ற பெயரில் மத்திய அரசு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பின் முக்கிய அங்கம் இது. இதில் பணியாற்றும் அனைவருமே விஞ்ஞானிகள். ராக்கெட், ஏவுகணை பற்றி புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த உதவுபவர்கள். இதன் இயக்குநராகப் பணியாற்றியவர் இங்குள்ள தொழில்நுட்பத்தை எடுத்து கொரியன் நிறுவனம் ஒன்றுக்குக் கொடுத்து வந்தார். இந்த நிறுவனம்தான் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பத்தை வைத்திருக்கும். ஆனால், இது, இயக்குநரால் உருவாக்கப்பட்ட போலியான நிறுவனம். இதனால் பல கோடி ஊழல் நடந்து வந்தது. இந்த உண்மை அங்கு பணியாற்றிய சிலர் மூலமாக எனக்குத் தெரியவந்தது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வசமுள்ள இந்தப் பகுதிக்கு அதன் இயக்குநரைச் சந்திக்க நேரில் சென்றேன். அனுமதிக்கவில்லை. சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இன்டர்காமில் பேசினேன். ‘உனக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என உதாசீனமாகப் பேசினார். ‘உங்கள் இ-மெயில் ஐ.டி. தாருங்கள் அதில் கேள்வி அனுப்புகிறேன். அதிலாவது பதில் சொல்லுங்கள்’ என்றேன். மறுத்துவிட்டார். ஆனால் நான் அவருடைய இ-மெயில் முகவரியைக் கண்டுபிடித்துக் கேள்வியை அனுப்பினேன். அதற்கும் ‘நான் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று பதில் தந்தார். ஏவுகணை, ராக்கெட்டை உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்ட கம்பெனி முகவரியைக் கண்டுபிடித்து நேரில் சென்றேன். அது ஒரு போலியான இடம் என்று தெரியவந்தது. தில்லியிலுள்ள அதிகாரியிடம் விஷயத்தைத் தெரிவித்துக் கருத்துக் கேட்டேன். ‘இப்போதுதானே சொல்லியிருக்கிறீர்கள். நான் பார்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’ என்றார். ஒட்டு மொத்த ஊழலையும் கண்டறிந்து ஆதாரங்களுடன் டைம்ஸ் அஃப் இந்தியாவில் வெளியானது. செய்தியைப் பார்த்த சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்து விசாரணையில் இறங்கியது. நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை பெரிதாக எழுப்பப்பட்டது. தவறு செய்த இயக்குநர் கைது செய்யப்பட்டார்."


மிரட்டல் வரவில்லையா?



வரவில்லை. வந்தாலும் நான் அதைப் பெரிதாக எடுப்பதில்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு எத்தனை பெரிய பிரச்னையும் கையில் எடுத்து ஜெயிக்கலாம் என்ற உற்சாகம் கிடைத்துள்ளது. என் கணவர் கார்த்திகேயன், மகள் ஸ்ரீமீரா, அம்மா எனப் பலரும் என்னுடைய இந்தச் செயலுக்கு ஊக்கமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது."


இந்தத் தைரியம் எப்படி வந்தது?



நாட்டில் எத்தனையோ ஊழல் நடக்கிறது. ஆனால் நமக்குத் தெரிந்து நடக்கும் விஷயத்தை வெளியே கொண்டு வருவது தவறில்லையே. ரிஸ்க் எந்த வேலையில்தான் இல்லை. பெண் பத்திரிகையாளர் என்றாலே எளிதான வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. விசாரணை செய்து பல உண்மைகளையும் வெளியே கொண்டு வரலாம். இந்தத் துறையில் பெண்கள் வரவு மிகவும் குறைவாக உள்ளது. அதிகம் வரவேண்டும் என்பதே என் ஆசை."


இங்கிருப்பவர்கள் யாரும் உங்களைப் பாராட்டவில்லையா?



பத்திரிகை வட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களும் விஷயத்தைக் கேள்விப்பட்டு பாராட்டினார்கள். ஆனால் முழுமையான அங்கீகாரம் இங்கிருந்து கிடைக்கவில்லை என்ற வருத்தம் உண்டு."


எதிர்கால நோக்கம் என்ன?



இந்தச் சமூகத்தில் என்னையும் ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் நான் பத்திரிகையாளர் என்றதும் அவர்களின் பார்வை, பேச்சு எல்லாமே மாறுபடுகிறது. மரியாதை கிடைக்கிறது. நம்முடைய அதிகாரத்தால் நாட்டின் வளர்ச்சித் திட்டம் தொடர்பான ஊழல்கள் வெளியே கொண்டுவர வேண்டும். அதன் வழியாக இந்தச் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்."


மறக்க முடியாத அனுபவம்...?


2009-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்துப் பிரத்யேகமாக ஒரு மணி நேரம் பேட்டி எடுத்தேன். மற்ற ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் பலர் முயற்சித்தும் வெற்றி கிடைத்தது எனக்குத்தான்."
-----------------------------------------------------------------------------
ஒரு பெண் எந்த துறையிலும் எதையும் சாதிக்கலாம் என்ற நிதர்சனத்தை இந்த கட்டுறை நன்கு உணர்த்துகிறது. 'அஜிதா' செய்த சாதனை மகத்தானது. அவரை அனைவரும் பாராட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

"பாரதிமணியன்"


Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles