Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

Lamentation by a postman

$
0
0
ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார்.
தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார்.
அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா?
ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர், "உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.
அதற்கு அந்த தபால்காரர், " ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.

Jayasala 42


Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles